கேரளா மாநிலத்தில் தற்போதைய சூழலில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ள
நிலையிலும், ஓணம் பண்டிகையை
ஒட்டி கேரள மாநிலத்தில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் வணிக வளாகங்களை திறக்க அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் பாதிப்புகள் குறைந்து நிலைமை மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறது. பாதிப்பு குறைந்துள்ளதால் அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வருகிறது. ஆனால் கேரளா மாநிலத்தில் மட்டும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களின் பட்டியலில் முதல் இடத்தில கேரளா உள்ளது. இதனால் நோய் தடுப்பு மற்றும் ஆய்வு பணிகளுக்காக மத்திய அரசு நிபுணர் குழுவை அனுப்பியுள்ளது.
இந்த குழுவினரும் தங்களது ஆய்வுகளை முடித்து அரசிடம் அறிக்கையை ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், மாநிலத்தில் நேற்றைய நிலவரப்படி, 20,367 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தின் தொற்று பாதிப்பு விகிதம் 13.35 % ஆக உள்ளது. நேற்று 139 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 3ம் தேதி முதல் நேற்று வரை 5 நாட்களில் மட்டும் 1,08,445 பேருக்கு நோய் பரவி உள்ளது. பாதிப்புகள் அதிகமுள்ளதால் வார இறுதி ஊரடங்கு சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் அமலில் உள்ளது.
இந்த வாரத்தில் இருந்து ஞாயிறு கிழமை மட்டும் ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
இதற்கிடையே ஓணம் பண்டிகை இந்த மாதம் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால், வரும் ஆகஸ்ட் 11ம் தேதி முதல்
அனைத்து வணிக வளாகங்களையும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட
அனுமதி இல்லை. அனைத்து பகுதிகளிலும் நோய் தடுப்பு நடவடிக்கை முறையாக கடைபிடிக்க
வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது
0 Response to "ஆகஸ்ட் 11 முதல் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி – கேரள மாநில அரசு அறிவிப்பு!"
Post a Comment