
2020 ஒலிம்பிக் போட்டிகள் நடப்பாண்டில் வெற்றிகரமாக நடந்து முடிந்து விட்ட
நிலையில், தற்போதே அடுத்த
ஒலிம்பிக் போட்டிகள் குறித்த ஆர்வம் மக்களிடையே தொற்றியுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள்:
32 வது ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆண்டு ஜப்பான் நாட்டின் தலைநகரான
டோக்கியோவில் நடக்க இருப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு முதல்
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள காரணத்தால் போட்டிகள் கடந்த
ஆண்டு தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து நடப்பாண்டில் தீவிர கட்டுப்பாடுகளுக்கு
இடையில் போட்டிகள் அனைத்தும் நடத்தப்பட்டது. பார்வையாளர்கள் யாரும்
அனுமதிக்கப்படவில்லை. 2020 போட்டிகளில் 206 நாடுகளை சேர்ந்த 11,326 வீரர்கள், 33 விளையாட்டில் 229 ஈவென்ட்டுகளில் கலந்து கொண்டனர்.
போட்டிகள் கடந்த ஜூலை 23ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 8ம் தேதி வரை தொடர்ந்து 16 நாட்கள் நடைபெற்றது. பொதுவாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த கட்டமாக 2024ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற உள்ளது. போட்டிகள் ஜூலை 26,
2024 அன்று தொடங்கும். முன்னதாக 1900 மற்றும் 1924ம் ஆண்டுகளில்
பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டது.
அப்போதைய போட்டிகளில், 32 விளையாட்டுகளில் 329 போட்டிகள் நடைபெற உள்ளது. அதில், சுமார் 10,500 வீர்ரகள் கலந்து
கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றில் இருந்து 1082
நாட்களில் அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளது.
பொதுவாக போட்டிகள் நடப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே போட்டிகள் குறிப்பிட்ட
ஆண்டுகளில் எந்த நாட்டில் நடைபெறும் என்று தேர்வு செய்யப்பட்டு, அதற்கான ஆயத்த பணிகள் முன்னதாகவே தொடங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "Tokyo Olympics 2020 நிறைவு – அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் எங்கே?"
Post a Comment