தனியார் பள்ளிகளில் அரசு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் இட
ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான கால அவகாசம் கோவை மாவட்டத்தில்
நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில் சமூக, பொருளாதார ரீதியாக பின் தங்கிய மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் எல்.கே.ஜி அல்லது ஒன்றாம் வகுப்பு என தொடக்க வகுப்புகளில் ஒதுக்கப்படுகிறது. இந்த நடைமுறை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 8,300 தனியார் பள்ளிகளில் 2021-22ஆம் கல்வியாண்டில் எல்.கே.ஜி மற்றும் ஒன்றாம் வகுப்பில் 1,03,330 இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் RTE இட ஒதுக்கீட்டில் மொத்தம் 4,710 இடங்கள் உள்ளது. இதில் கடந்த 3ம் தேதி வரை 2,511 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. மீதமுள்ள இடங்களுக்கு பொதுமக்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஜூலை 5ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை விண்ணப்பிக்க முன்னதாக அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் அதிக அளவிலான இடங்களுக்கு விண்ணப்பங்கள் வராத நிலையில், தற்போது ஆகஸ்ட் 13ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது
பெற்றோர் பள்ளிக் கல்வித்துறையின் rte.tnschools.gov.in
என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். பள்ளிகளில்
விண்ணப்பங்கள் பெறப்பட்டால் ஒப்புகை சீட்டு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வளமைய அலுவலகங்களிலும் இணையவழியில்
விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும்போது, புகைப்படம், பிறப்புச் சான்று
அல்லது பிறப்புச் சான்றுக்கான பிற ஆவணம், இருப்பிடச் சான்று, வருமானச் சான்று போன்று அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
0 Response to "தமிழக தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 13 வரை விண்ணப்பிக்கலாம்! "
Post a Comment