Reliance Jio ஃப்ரீடம் திட்டம் ஆஃபர் – முழு விவரங்கள் இதோ!

Trending

Breaking News
Loading...

Reliance Jio ஃப்ரீடம் திட்டம் ஆஃபர் – முழு விவரங்கள் இதோ!

Reliance Jio ஃப்ரீடம் திட்டம் ஆஃபர் – முழு விவரங்கள் இதோ!

 


ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் கீழ் ப்ரீபெய்ட் பேக்குகளை அறிவித்துள்ளது. இந்த திட்டங்களில் தினசரி டேட்டா லிமிட் மற்றும் கூடுதல் நன்மைகள் இல்லை. ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் குறைந்த விலை பேக் ரூ.127 முதல் மிகவும் விலையுயர்ந்த பேக் விலை ரூ.2397 வரை இருக்கிறது.
 

ரிலையன்ஸ் ஜியோ: 

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய ரீசார்ஜ் திட்டங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. இருப்பினும் சமீபத்தில் ஜியோ ஃப்ரீடம் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் தினசரி டேட்டா லிமிட் இல்லாமல் வருகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு டேட்டா மட்டுமே தினசரி செலவு செய்ய வேண்டும் என்ற நிபந்தனை இல்லாமல் இருக்கிறது. இதில், புதிதாக 5 புதிய திட்டங்கள் உள்ளது. ஜியோ ஃப்ரீடம் திட்டத்தின் விலை குறைவான பேக் ரூ.127 ல் இருந்து ஆரம்பித்து அதிகபட்சமாக ரூ.2397 வரை உள்ளது. 

ரூ 127 திட்டம்: 

இந்த திட்டத்தில் 15 நாட்கள் வேலிடிட்டி உடன் இலவச கால்கள், 12 ஜிபி டேட்டா உடன் வருகிறது. மேலும், அனைத்து நெட்வொர்க்கில் உள்ள பயனர்களுக்கும் இலவச கால்கள் வழங்குகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ பயன்பாடுகளுக்கான இலவச சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. 

247 திட்டம்: 

இந்த திட்டத்தில் 25 ஜிபி டேட்டா மொத்தம் 30 நாட்களுக்கு கிடைக்கிறது. அனைத்து இலவச ஜியோ சேவைகளும் வழங்கப் படுகிறது. இலவச கால்கள், தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் திட்டத்தில் ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தாவும் இலவசமாக கிடைக்கிறது. 

ரூ .447 திட்டம்: 

இந்த திட்டத்தில் 50 ஜிபி டாட்டா 60 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. ரிலையன்ஸ் ஜியோவின் இந்தத் திட்டத்தில், அனைத்து நெட்வொர்க்கில் உள்ள பயனர்களுக்கும் இலவச கால்கள் வழங்குகிறது. ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் உடன் ஜியோ செயலிகளின் இலவச சந்தாவும் கிடைக்கும். 

ரூ. 597 திட்டம்:

ரூ. 597 திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. இதில் 75 ஜிபி டேட்டா, இலவச கால்கள், JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் iCloud ஆகிய அம்சங்களுடன், ஒவ்வொரு நாளும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ செயலிகளின் இலவச சந்தா வழங்கப்படுகிறது. 

ரூ .2,397 திட்டம்: 

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ 2397 திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கிறது. மேலும், இந்த திட்டத்தில் மொத்தம் 365 ஜிபி டேட்டா தரப்படுகிறது. அனைத்து நெட்வொர்க்கில் உள்ள பயனர்களுக்கும் இலவச கால்கள், மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வசதி கிடைக்கிறது. அனைத்து ஜியோ பயன்பாடுகளுக்கான சந்தா இலவசமாக கிடைக்கிறது.

0 Response to "Reliance Jio ஃப்ரீடம் திட்டம் ஆஃபர் – முழு விவரங்கள் இதோ!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel