கேரளாவில் ஓணம் பண்டிகையையொட்டி, எச்டிஎப்சி வங்கி பல்வேறு தள்ளுபடி ஒப்பந்தங்களை வாடிக்கையாளர்களுக்கு
அறிவித்துள்ளது.
ஓணம் சிறப்பு சலுகை:
கேரளாவிற்கும் கேரளர்களுக்கும் ஓணம் ஒரு முக்கியமான பண்டிகை ஆகும். இது அவர்களுக்கு ஒரு ஆண்டின் புதிய தொடக்கமாக இருக்கிறது. இது குறித்து, ஹெச்டிஎஃப்சி வங்கியின் கேரள மண்டலத் தலைவர் திரு. ஹேமி செபாஸ்டியன் அவர்கள் அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா தொற்று பாதிப்புக்கு இடையிலும் மக்கள் தங்களின் வாழ்வில் ஒரு புதிய தொடக்கத்தை எதிர்பார்க்கிறார்கள். இதனால் கடன் திட்டங்களுக்கு சிறப்பு சலுகை, குறைந்த செயலாக்க கட்டணம் மற்றும் குறைந்த வட்டி விகிதம் ஆகியவற்றை வங்கி நிர்வாகம் வழங்க திட்டமிட்டுள்ளது.
நிர்வாகம் அறிவித்துள்ள இந்த சலுகைகள் அனைத்தும் செப்டம்பர் 30ம் தேதி வரை செல்லுபடியாகும். இதனால், கார் கடன், இரு சக்கர வாகன கடன், வீட்டுக்கடன் ஆகியவற்றுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க சலுகைகள் & வணிகக் கடன்கள். வங்கி தங்கக் கடன், பத்திரங்களுக்கு கடன் மற்றும் சொத்துக்களுக்கு கடனையும் வழங்குகிறது. மேலும், HDFC வங்கி டெபிட் & கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் தள்ளுபடிகள் & கேஷ்பேக்குகள் கிடைக்கும். அவர்கள் கூடுதல் கட்டணமின்றி தங்கள் EMI ஆக செலுத்த தகுதி உடையவர்களாகக் கருதப்படுவர்.
இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு வங்கி வாடிக்கையாளர்கள் 100% வரை நிதியுதவி
பெறலாம். வங்கி செயலாக்கக் கட்டணத்தையும் 50%குறைத்துள்ளது. வீட்டுக் கடன்
பெறுவதற்கு 6.75% p.a வட்டி விகிதம் முதல்
தொடங்கும். தனிநபர் கடனுக்கான செயலாக்க கட்டணம் ரூ. 1999 மற்றும், வணிகக் கடன்களுக்கான 50% செயலாக்கக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். ரூ .75
லட்சம் வரை தனிநபர் மற்றும் வணிக கடன்களை வழங்குகிறது.
0 Response to "HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – பண்டிகை கால சலுகைகள்! "
Post a Comment