தமிழகத்தில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் – ஆகஸ்ட் 14ம் தேதி தாக்கல்!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் – ஆகஸ்ட் 14ம் தேதி தாக்கல்!

தமிழகத்தில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் – ஆகஸ்ட் 14ம் தேதி தாக்கல்!

 


தமிழகத்தில் வரும் ஆகஸ்ட்
14ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என உணவு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்தல் பன்னாட்டு கருத்தரங்கில் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
பட்ஜெட் தாக்கல்:
 
தமிழகத்தில் வேளாண் தொழில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அரசு வேளாண் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக புதிய நல திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் பயிர் கடன் வழங்கப்பட்டு விளைச்சலை அதிகரிக்கவும், வேளாண் தொழில் வளர்ச்சிக்கு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது தலைமையேற்றுள்ள திமுக அரசு விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
 
 
அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 4ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தின் நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியாவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் நிதி நிலை அறிக்கை சமர்பிப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்பட்டது. இதனையடுத்து வரும் ஆகஸ்ட் 14 ம் தேதி தமிழகத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் சென்னை தரமணி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் உணவு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்தல் பன்னாட்டுக் கருத்தரங்கில் பேசிய முதல்வர் நாட்டுக்கு உயிராகவும், உடலாகவும் உள்ள வேளாண்மை துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தருகிறது. மேலும் ஆகஸ்ட் 14ம் தேதி பட்ஜெட் தாக்கலின் போது வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

0 Response to "தமிழகத்தில் வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் – ஆகஸ்ட் 14ம் தேதி தாக்கல்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel