தமிழகத்தில் செப்.15 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் செப்.15 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் செப்.15 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!


தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் செப்டம்பர்
15ம் தேதி வரை நீடிக்கப்படுவதாகவும், அதற்கான வழிகாட்டுதல்களும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை கடந்த மார்ச் மாதம் முதல் பரவ தொடங்கியது. ஆரம்ப கட்டத்தில் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்த நிலையில், ஏப்ரல் மாத இறுதி மற்றும் மே மாத தொடக்கத்தில் தினசரி பாதிப்புகள் உச்ச கட்டத்தை அடைந்தது. இதனால் தமிழக அரசு கடந்த மே 10ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. தொடர்ந்து தீவிர ஊரடங்கு கட்டுப்பாடுகளின் விளைவினால் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த ஜூலை மாத வாக்கில் குறையத் தொடங்கியது.

இதனால் தமிழக அரசு படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அளித்து வந்தது. பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது. இந்நிலையில் இறுதியாக ஆகஸ்ட் 23 ம் தேதி முதல் செப்டம்பர் 9ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் நீடிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில், தற்போதைய கொரோனா சூழல், தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தொற்று பரவல் அதிகரித்துள்ள கேரள மாநிலத்தில் இருந்து வருவோருக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் செப்டம்பர் 15ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்:

·         வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல இருக்கும் தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

·         திருவிழாக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

·         விநாயகர் சதுர்த்தி பண்டிகையில், பொது இடங்களில் விநாயகர் சிலையை வைக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

·         சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

·         சென்னை சாந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரை கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்க தடை விதிக்கப்ட்டுள்ளது.

·         தனிநபர் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலையை தனித்தனியே எடுத்துச் சென்று கரைக்கலாம்.

·         செப்டம்பர் 15ம் தேதி வரை நடக்கும் சமய விழா கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

·         சென்னை, நாகை, கன்னியாகுமரி போன்ற இடங்களில் ஆரோக்கிய மாத திருவிழாவை பொது இடங்களில் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

·         பள்ளிகள் திட்டமிட்டபடி, செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

·         ஞாயிறு கிழமைகளில் கடற்கரைகளுக்கு செல்ல தடை தொடரும்.


 

0 Response to "தமிழகத்தில் செப்.15 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் உத்தரவு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel