
தமிழகத்தில்
கல்லூரி மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை பெற விரும்புவோர் இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரிக்
கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
உதவித்தொகை
:
தமிழகத்தில்
கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் பல நல திறன்கள் அளிக்கப்பட்டு
வருகிறது வீட்டில் முதல் பட்டதாரிக்கு கல்வி உதவித்தொகைகள் அளிக்கப்படுகிறது.
மேலும் பட்டியலின மக்கள் மட்டும் பிற்படுத்தப்பட்டோர் மிக பிற்படுத்தப்பட்டோர்
போன்றவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் கவி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு
வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் ஊக்கம் பெற்று பள்ளி படிப்போடு நிறுத்தி விடாமல்
தொடர்ந்து மேற்படிப்பை தொடர்கின்றனர்.
மாநில அரசுகளை தொடர்ந்து மத்திய அரசு உயர்கல்வி படித்தவர்களுக்கு
உதவித்தொகை வழங்கி வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால், திறன் அடிப்படையில் வழங்கப்படும் கல்வி
உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்
கீழ் உதவித் தொகையை மத்திய அரசே நேரடியாக வழங்குகிறது.
உதவித்தொகை பெற விரும்புவோர் https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
12ம் வகுப்பு முடித்தவர்கள் நடப்பு ஆண்டு
நவம்பர் மாதம் வரை உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டு முதல் விண்ணப்பித்தவர்கள் கல்வி
உதவி தொகை விண்ணப்பம் மற்றும் புதுப்பித்தல் ஆகிய நடைமுறை இணையதளத்திலேயே
மேற்கொள்ளலாம்.
0 Response to "மத்திய அரசு சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை – முக்கிய அறிவிப்பு!"
Post a Comment