அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை – கலந்தாய்வு தேதி வெளியீடு!

Trending

Breaking News
Loading...

அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை – கலந்தாய்வு தேதி வெளியீடு!

அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை – கலந்தாய்வு தேதி வெளியீடு!


கடலூர் அரசு கலை கல்லூரியில் நடப்பு கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கலந்தாய்வு :

தமிழகத்தில் கடந்த 17 ம் தேதியுடன் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முடிவடைந்த நிலையில் அனைத்து கல்லூரிகளும் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடலூர் அரசு கலை கல்லூரியில் கலந்தாய்வின் போது அனைத்து மாணவர்களும் ஒரே நேரத்தில் கூடியதால் சமூக இடைவெளியை கடைபிடிக்காத நிலை ஏற்பட்டது. அதனால் கலந்தாய்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (31.08.2021) அறிவியல் பாடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இனசுழற்சி அடிப்படையில் காலை 9 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும். அதனை தொடர்ந்து கலை பாடங்களுக்கு மதிப்பெண்கள் அடிப்படையில் காலை 9 மணி மதியம் 2 மணி வரை கலந்தாய்வு நடைபெறும். இந்த கலந்தாய்வானது செப்டம்பர் 2 முதல் 9 ம் தேதி வரை நடைபெறும்.

அதே போல ஆங்கில படத்திற்கு செப்டம்பர் 11 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் தமிழ் பாடத்துக்கு செப்டம்பர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். மேலும் அறிவியல் பாடத்திற்கு இரண்டாம் கட்ட கலந்தாய்வு இனசுழற்சி அடிப்படையில் செப்டம்பர் 16ம் தேதியும் கலை பாடங்களுக்கு செப்டம்பர் 17 தேதியும் நடைபெறும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

0 Response to "அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை – கலந்தாய்வு தேதி வெளியீடு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel