தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – தலைமை செயலர் ஆலோசனை!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – தலைமை செயலர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – தலைமை செயலர் ஆலோசனை!


தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா தடுப்பூசி :

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் பயன்பட்டால் தொற்று எதிர்பார்த்த அளவு குறைந்துள்ளது. கடந்த மாதங்களை விட நடப்பு மாதத்தில் தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. கொரோனா தடுப்பூசிகள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. இதனால் மக்கள் அலட்சியம் காட்டாமல் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. கோவிட்ஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் 2 டோஸ் செலுத்தப்பட்டு வருகிறது.

மேலும் தடுப்பூசி செலுத்த மக்களுக்காக சென்னையில் 400 கொரோனா தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி வேகப்படுத்தபட்டு வருகிறது. இந்த நிலையில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் முன்னுரிமையின் அடிப்படையில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அதே போல கல்லூரிகளும் திறக்கப்பட்டுள்ளதால் கல்லூரி மாணவர்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

மேலும் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே நேரடி வகுப்புகளில் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டான் தமிழக தலைமை செயலாளருடன் ஆலோசனை மேற்கொண்டார் அதனை தொடர்ந்து தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் குறித்து தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு அவர்கள் காணொலி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தி வருகிறார்.

0 Response to "தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் – தலைமை செயலர் ஆலோசனை!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel