மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Trending

Breaking News
Loading...

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!


திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது என்றும் தகுதியும் விருப்பமும் உடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு :

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்றல் கடந்த சில மாதங்களில் ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். மேலும் மாநிலத்தின் பொருளாதார நிலையும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. வேலை இழந்து உள்ளவர்களுக்கு மீண்டும் வேலை அளிக்கும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. இதில் தனியார் துறைகளும் இணைந்து அவ்வப்போது வேலை சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி வேலை வாய்ப்பை வழங்குகின்றனர். மேலும் அரசு துறையில் காலிப்பணியிடங்களை கணக்கெடுத்து துறை வாரியாக வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அதன்படி தற்போது திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் சமூகப்பணியாளர், ஆற்றுப்படுத்துனர் ஆகிய காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. ஓராண்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி, முதுகலை பட்டதாரி, சமூகப்பணி, உளவியல் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பணியில் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என்றும் 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. கணினி பயன்படுத்த தெரிந்தவராக இருக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை வருகிற 10 தேதி மாலை 5. 45 மணிக்குள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 6 வது தளத்தில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

0 Response to "மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel