
சேலம் மாவட்டத்தில்
கொரோனாவால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட ஊன்றுகோல்
திட்டத்தில் கீழ் தனியார் துறை சார்பில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நேற்று
நடைபெற்றது.
வேலைவாய்ப்பு
முகாம்:
தமிழகத்தில் கொரோனா
பரவல் காரணமாக கடந்த மே மாதம் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து
கடைகள் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டது. இந்த ஊரடங்கால் ஏராளமானோர் வேலையிழந்து
அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த நிலையில்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்து அவர்களின் குடும்ப உறுப்பினர்கள்
வறுமையில் தவித்து வருகின்றனர். வருமானம் ஈட்டும் குடும்ப உறுப்பினர் இல்லாததால்
குடும்பத்தை சமாளிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு உதவும் வகையில் அரசு நிவாரண நிதிகளை வழங்குகிறது. மேலும்
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பை
ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு
பகுதியாக சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்களுக்காக
அமைக்கப்பட்ட ஊன்றுகோல் திட்டத்தின் கீழ் தனியார் துறை சார்பில் சிறப்பு
வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடைபெற்றது.
இந்த முகாமில், 35 தனியார் நிறுவனங்கள் ஆட்களை தேர்வு
செய்தனர். மேலும் இந்த சிறப்பு முகாமில் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் கலந்து
கொண்டார். இம்முகாமில் பாதிக்கப்பட்ட ஆண்கள் 157 பேர், பெண்கள், 45 பேர் என, மொத்தம் 202 பேர் பங்கேற்றனர். இந்த சிறப்பு வேலைவாய்ப்பு
முகாமில் பேசிய மாவட்ட ஆட்சியர் தகுதி, விருப்பம் உள்ளவர்களுக்கு, தேவையான வேலைவாய்ப்பு ஏற்படுத்தி
கொடுக்கப்படும் என்றார்.
0 Response to "கொரோனோவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்பு – சிறப்பு முகாம்!"
Post a Comment