தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? போராட முடிவு!

Trending

Breaking News
Loading...

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? போராட முடிவு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? போராட முடிவு!


தமிழக அரசு
, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்காவிட்டால் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 9 ஆகிய தேதிகளில் போராட்டம் நடைபெறும் என்று ஊழியர் சங்கத் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ஓய்வூதிய திட்டம்:

தமிழகத்தில் கடந்த 2003ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. இதில் பணி நிறைவுக்கு பின் மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதிய தொகை மறுக்கப்பட்டது. பணியின் போது பிடித்தம் செய்யப்பட்ட தொகை மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் உட்பட அரசு ஊழியர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் எந்த பயனும் இல்லை தற்போது வரை புதிய ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதியில் திமுகவினர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் என்று உறுதியளித்தார். தற்போது ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆன பின்னும் அவை நடைமுறைக்கு வரவில்லை. அதன் பின் கடந்த 14ம் தேதி பட்ஜெட் தாக்கல்
செய்யப்பட்டது. அப்போது அரசு ஊழியர்களுக்கான எந்த அறிவிப்பும் நிதி நிலை அறிக்கையில் இடம் பெறவில்லை. இது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருடன் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்தாலோசனையில் ஈடுபட்டனர். இதில் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர். இக்கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி கருப்பு பட்டை அணிந்து பணிபுரிவோம். மேலும் செப்டம்பர் 9ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் போன்றவைகள் நடைபெறும் என்று ஊழியர் சங்க தலைவர், பொது செயலாளர் தெரிவித்துள்ளனர்.


0 Response to "தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து? போராட முடிவு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel