செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள மாநிலங்களின் பட்டியல் – வெளியீடு!

Trending

Breaking News
Loading...

செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள மாநிலங்களின் பட்டியல் – வெளியீடு!

செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள மாநிலங்களின் பட்டியல் – வெளியீடு!


நாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்துள்ளதையொட்டி பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் நாளை (செப்டம்பர்
1) முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளன. அதன்படி பள்ளிகளை திறப்பதற்கு, மாநிலங்கள் தோறும் விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்த தகவல்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு

கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் உருவான கொரோனா 2 ஆம் அலை காரணமாக கிட்டத்தட்ட 4 மாதங்களாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே நோய் தொற்று குறைந்து வந்ததையடுத்து பல்வேறு மாநிலங்களில் கடந்த ஜூலை மாதம் முதலே பள்ளிகளில் நேரடி வகுப்புகள் துவங்கியது. இருப்பினும் சில மாநிலங்களில் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கைகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகம், டெல்லி, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் நாளை (செப்டம்பர் 1) முதல் மீண்டுமாக பள்ளிகள் திறக்கப்பட இருக்கிறது. இதனுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் மாநில அரசுகள் அறிவித்துள்ளது. அந்த வகையில் பள்ளி வளாகங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்ட செயல்பாடுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன் கீழ்,

டெல்லி: செப்டம்பர் 1 முதல் 9 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். மேலும், யூனியன் பிரதேசத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு வகுப்பறைக்கும் 50 சதவீத திறனுடன் மாணவர்களை அனுமதிக்க அரசு அனுமதித்துள்ளது.

தமிழ்நாடு: பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் போன்ற கல்வி நிறுவனங்கள் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது. அதன் கீழ் அரசு வெளியிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும். பள்ளி மற்றும் கல்லூரிகளில் விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசம்: பள்ளிகள் அனைத்தும் 6 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு மீண்டும் திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் 50 சதவீத திறனுடன் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் வாரத்திற்கு இரண்டு முறை நடத்தப்பட்ட உள்ளன.

ராஜஸ்தான்: 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

திரிபுரா: செப்டம்பர் 1 முதல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்கள், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. வகுப்பறைகளில் இருக்கும் இடத்தை பொறுத்து அனைத்து பள்ளிகளும் 1 அல்லது 2 ஷிப்டுகளில் செயல்பட இருக்கிறது.

தெலுங்கானா: பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நேரடி வகுப்புகள் நாளை முதல் மீண்டும் தொடங்கும்.

0 Response to "செப்.1 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள மாநிலங்களின் பட்டியல் – வெளியீடு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel