
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்
நடைபெறவுள்ளது. அதனால் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவை
வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல்:
தமிழகத்தில் அரசின் நிர்வாக வசதிக்காக
பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்கும் பணி நடைபெற்றது.
அதன்படி திருநெல்வேலி மாவட்டம் பிரிக்கபபட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதே
போல வேலூர் மாவாட்டம் மூன்றாக பிரிக்கப்பட்டு திருப்பத்தூர், இராணிப்பேட்டை போன்ற மாவட்டங்கள்
உருவானது. மேலும் நாகப்பட்டினம் மாவட்டம் பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டம்
உருவாக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி போன்ற 9 புதிய மாவட்டங்கள் உருவானது.
கடந்த முறை நடைபெற்ற ஊரக உள்ளாட்சி
தேர்தலில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரையறை முடிவடையாததால்
உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. தற்போது செப்டம்பருக்குள் ஊரக உள்ளாட்சி தேர்தலை
நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசியில் முன்னேற்பாடுகள்
விரைவுபடுத்தப்பட்டு வருகிறது.
தேர்தல் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு பயிற்சி முகாமை மாநில தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது. அதனை தொடர்ந்து தொகுதி வாரியாக ஊராட்சி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் எந்த நேரத்தில் தேர்தல் அறிவித்தாலும் மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக விழுப்புரம் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
0 Response to "தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் – வாக்காளர் பட்டியல் வெளியீடு!"
Post a Comment