தமிழக அரசின் வலிமை சிமெண்ட் – தொழில் துறை அமைச்சர் அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

தமிழக அரசின் வலிமை சிமெண்ட் – தொழில் துறை அமைச்சர் அறிவிப்பு!

தமிழக அரசின் வலிமை சிமெண்ட் – தொழில் துறை அமைச்சர் அறிவிப்பு!


தமிழக அரசின் சிமெண்ட் நடப்பாண்டு முதல் வலிமை என்ற புதிய பெயரில் வெளி சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

வலிமை சிமெண்ட்:

தமிழகத்தில் புதிய ஆட்சிக்கு பின்னர் முதல் பட்ஜெட் தாக்கல் ஆகஸ்ட் 13ம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர், வேளாண்மை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன்பின்னர், தொடர்ந்து தமிழக அரசின் துறைகளின் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் திட்டங்கள் குறித்து சட்டப்பேரவையில் கூட்டம் நடந்து வருகின்றது. தொடர்ந்து தினமும் வரிசையாக துறை வாரியான விவாதம் நடந்து வருகின்றது. அந்த வகையில், சட்டப்பேரவையில் இன்று தொழில்துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது.

தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அனைவருக்கும் பதில் அளித்தார். அப்போது, இனி தமிழில் பெயர் எழுதும் பொழுது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் முன் எழுத்தை தமிழில் எழுதும் நடைமுறை பள்ளி, கல்லூரி, அரசு ஆவணங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். தீராக்காதல் திருக்குறள் என்ற பெயரில் தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். தீந்தமிழ் நிகழ்ச்சிகள் நடத்த ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பயனற்ற பழைய சுரங்கம், குவாரிகளை மக்களுக்கு பயனுள்ள அமைப்புகளாக மாற்றி தரப்படும்.

விருதுநகரில் ரூ 400 கோடியில் ஒருங்கிணைந்த ஆடை பூங்கா அமைக்கப்படும். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 500 ஏக்கர் பரப்பில் ரூ 5.90 கோடியில் உப்பு உற்பத்தி தொடங்கப்படும். தமிழக அரசின் சிமெண்ட் வலிமை என்ற பெயரில் வணிக சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார். மேலும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விதிகளுக்கு புறம்பாக கனிமங்களை எடுப்பதை தடுக்க ஆளில்லா சிறியரக விமானம் பயன்படுத்தப்படும். குவாரி படுக்கையில் இருந்து வரலாற்று சின்னங்கள், பழந்தமிழர் கல்வெட்டு, சமண படுக்கை பாதுகாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

0 Response to "தமிழக அரசின் வலிமை சிமெண்ட் – தொழில் துறை அமைச்சர் அறிவிப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel