தமிழக அரசு சார்பில் ரூ.2,000 இழப்பீடு – வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

தமிழக அரசு சார்பில் ரூ.2,000 இழப்பீடு – வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பு!

தமிழக அரசு சார்பில் ரூ.2,000 இழப்பீடு – வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பு!


தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு உள்ளான மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு ரூ.
2,000 இழப்பீடாக வழங்க உள்ளதாக அறிவித்து உள்ளார்.
 
பயிர் இழப்பீடு:
 
தமிழகத்தில் வேளாண்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகள் நலன் மற்றும் பயிர்கள் நலனுக்காக பல சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இயற்கை பேரழிவுகள் மற்றும் வேறு ஏதேனும் காரணங்களினால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் அரசு ஆய்வு செய்து பயிர்களுக்கான இழப்பீட்டு தொகையை வழங்கும். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு, பட்ஜெட் பற்றிய விவாதங்கள் சட்டசபையில் நடந்து வருகிறது.
 
இந்நிலையில் சேலம், ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் போன்ற 10 மாவட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான மரவள்ளி கிழங்கு பயிர்களில் மாவுப் பூச்சியின் தாக்குதல் உள்ளது. இதனால் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். இந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தார்.
 
இது தொடர்பாக, வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் மாவுப்பூச்சி தாக்குதலுக்கு உள்ளான மரவள்ளிக்கிழங்கு பயிருக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு தலா 2000 ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்தார். நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள மொத்த நிலங்களுக்கும் ஒரு கோடியே 78 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இதேபோல், கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரண நிலுவைத் தொகை ரூ.182 கோடி உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

0 Response to "தமிழக அரசு சார்பில் ரூ.2,000 இழப்பீடு – வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel