
சில நாட்களுக்கு முன்
ஆப்கானிஸ்தான் தலிபான் ஆதிக்கத்துக்குள் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து
இந்தியாவுடன் நடைபெற்று வந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம் தற்போது
நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் உலர் பழங்கள் விலை அதிகரிக்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
இறக்குமதி நிறுத்தம்:
ஆப்கானிஸ்தானில் இருந்து
அமெரிக்க, நேட்டோ படைகள்
வெளியேறிய பின் அங்கிருக்கும் பெரும்பாலான மாகாணங்களை தலிபான் தீவிரவாதிகள்
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அதிபர் அமீரகத்துக்கு தப்பி
ஓடியது குறிப்பிடத்தக்கது. ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையே நீண்ட காலமாக
வணிகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலிருந்து ஆடைகள், மருந்துகள், சர்க்கரை, காபி, வாசனைப் பொருட்கள்
போன்றவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதே போல் ஆப்கானிலிருந்து உலர் பழங்கள், பருப்பு வகைகள், வெங்காயம், தாதுக்கள் போன்றவை இறக்குமதி செய்யப்படுகின்றன. தற்போது ஆப்கானிஸ்தானில்
தலிபான்களின் ஆதிக்கம் அமைந்துள்ளதால் பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கான ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்தி விட்டது குறிப்பிடத்தக்கது.
2021ம் ஆண்டில் இதுவரை 8.35
கோடி டாலருக்கு வர்த்தகம் நடந்துள்ளது. மேலும் 5.10
கோடி டாலர் அளவுக்கு பொருட்களை இறக்குமதி செய்துள்ளது
இந்தியா. ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளை தவிர்த்து 300 கோடி டாலர் அளவுக்கு ஆப்கனில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ளனர். ஆப்கானில்
இருந்து உலர் பழங்கள், விலை உயர்ந்த
பருப்பு வகைகள் மாற்று சீசன் நேரங்களில் வெங்காயம் போன்றவை இறக்குமதி செய்யப்பட்டு
வருகிறது. தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து உலர் பழங்கள் இறக்குமதி தடைபட்டுள்ளதால்
உலர் பழங்களின் விலை அதிகரிக்கலாம் என இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின்
இயக்குநர் அஜய் சாஹே கூறியுள்ளார்.
0 Response to "இந்தியாவுடன் ஏற்றுமதி, இறக்குமதியை நிறுத்திய தலிபான்கள் – உலர் பழங்கள் விலை உயருமா?"
Post a Comment