
தெலுங்கானாவில் கொரோனா மூன்றாம்
அலை தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே பொது இடங்களுக்கு
செல்ல அனுமதிக்க அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் ஐதராபாத்தில் கொரோனா முதல் டோஸ் 100% செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி:
தெலுங்கானாவில் கொரோனா இரண்டாம்
அலை வேகமெடுத்து வருகிறது. கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முயற்சியாக பல்வேறு
முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்
விதிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் குறைக்கப்பட்டது. கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும்
பணி விரைவுபடுத்தப்பட்டு வருகிறது. இதனால் ஐதராபாத்தில் கொரோனா முதல் டோஸ் 100% செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகளின் விளைவாலும், அரசின் சீரிய முயற்சியாலும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள்
குறைந்துள்ளது. இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. மக்கள்
தங்களது இயல்பு வாழ்க்கையை நோக்கி திரும்பி கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில்
கொரோனா மூன்றாம் அலை வரும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளதால் தெலுங்கானா அரசு
முன்னெச்சரிக்கை பணிகளை விரைவுபடுத்தி வருகிறது. முதற்கட்ட பணியாக தடுப்பூசிகள்
கொரோனா தொற்றை எதிர்க்க பேராயுதமாக இருப்பதால் உடனடியாக தடுப்பூசிகளை செலுத்திக்
கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் சிலர்
தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதில் அலட்சியம் காட்டுவதாகவும், வீண் வதந்திகளை நம்பி தடுப்பூசி செலுத்த முன்வராத காரணத்தால் அனைவரையும்
தடுப்பூசி செலுத்த வைக்க வேண்டும் என்ற நோக்கில் புதிய நடைமுறையை கையாள உள்ளது.
கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டுமே திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், பேருந்துகள், கோவில்கள் போன்ற
பொது இடங்களில் நடமாட அனுமதிக்க வேண்டும் என்று அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான
அறிவிப்பு சில நாட்களில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
0 Response to "பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி சான்றிதழ் அவசியம் – மாநில அரசு திட்டம்!"
Post a Comment