
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்
கடந்த 13 ஆம் தொடங்கி
நடைபெற்று வருகிறது. இதில் பேசிய சபாநாயகர் அப்பாவு அவர்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு புத்தாக்க, கணினி பயிற்சி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
கணினி பயிற்சி:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில்
திமுக வெற்றி பெற்று, ஆட்சி பொறுப்பேற்று
பல மாதங்கள் ஆன நிலையில், முதல் முறையாக 2021-22 ஆம்
ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல்
முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றினார். மறுநாள் வேளாண் துறைக்கென தனி பட்ஜெட்
தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து செப்டம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெற உள்ள கூட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று
வருகிறது. நீர்வளத்துறை, உயர் கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறை, பொதுப்பணித்துறை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் மீனவர் நலம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தமிழ் வளர்ச்சி, மாற்றுத் திறனாளிகள்
நலத்துறை, இந்து சமய
அறநிலையத்துறை, சுற்றுலா, செய்தி மற்றும் விளம்பரம், கைத்தறி மற்றும் துணிநூல், போக்குவரத்து துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, காவல்துறை போன்றவை குறித்த விவாதங்கள் மேற்கொள்ளப்படும்.
இதனை தொடர்ந்து சட்டப்பேரவை
கூட்டத்தில் பேசிய சபாநாயகர் அப்பாவு சென்னை சேப்பாக்கம் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள்
விடுதியில் மாலை 4 மணிக்கு, எம்.எல்.ஏ-க்களுக்கு வரும் திங்கள், செவ்வாய் கிழமைகளில் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என்றும், புதன் முதல் வெள்ளி வரை கணினி பயிற்சி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதனால் எம்.எல்.ஏ-க்களும் கணினி பயன்பாட்டில் சிறந்து விளங்குவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.
0 Response to "தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கணினி பயிற்சி – அப்பாவு அதிரடி!"
Post a Comment