ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 2,000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 2,000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!

ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 2,000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!


Board Infinity
என்று அழைக்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனமான கல்வி மற்றும் தொழில் ஆய்வு தளம் அடுத்த ஆறு மாதங்களில் 2,000 புதிய மற்றும் இளம் நிபுணர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
 
வேலை வாய்ப்பு
 
இந்தியாவில் கொரோனா நோய் தொற்று குறைந்து கொண்டிருக்கும் சூழலில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் புதிய பணியமர்தலை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல ஸ்டார்ட் அப் நிறுவனமான போர்டு இன்ஃபினிட்டி அடுத்த 6 மாதங்களுக்குள் சுமார் 2 ஆயிரம் புதியவர்களை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்துள்ளது.
 
 
அந்த வகையில் தொழில்நுட்பம், டிஜிட்டல் மார்க்கெட்டிங், விற்பனை போன்ற துறைகளில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போர்டு இன்ஃபினிட்டி நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சுமேஷ் நாயர் கூறுகையில், ‘எங்கள் திட்டங்கள் மூலம் கற்றல் விளைவுகளில் 80 சதவிகித வெற்றியைப் பெற்றுள்ளது. இருப்பினும் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட வேலைகளை இது பாதித்துள்ளது.
 
 
அதனால் இந்த ஆண்டு வேகமாக வளர்ந்து வரும் மலப்புரம், நாசிக், ராஜ்கோட், அவுரங்காபாத், திருச்சி, லூதியானா, வதோதரா ஆகிய இடங்களில் புதிய வேலைக்கு ஊழியர்களை அமர்த்த திட்டமிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்காக அடுத்த 6 மாதங்களில் 2,000 பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் சுமார் 70 கோடி மொத்த வருவாயை இந்நிறுவனம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Response to "ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் 2,000 ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு – புதிய அறிவிப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel