
தமிழகத்தில் முன்னாள் கலைஞர் ஆட்சியில் அறிவித்தது போல அரசு
மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று அரசு மருத்துவ சட்ட போராட்ட குழு
தலைவர் பெருமாள் பிள்ளை முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊதிய உயர்வு :
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று தீவிரமெடுத்து பரவி வருகிறது. இதனை
கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. சுகாதார பணியாளர்கள், மருத்துவர்கள், காவலர்கள் ஆகியோர்
கள பணியாளர்களாக இருந்து தொற்றை குறைக்க தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இதில்
மருத்துவர்களின் பணி போற்றுதலுக்குரியது. கொரோனா தொற்றால் நாடெங்கும்
உயிரிழப்புகள் ஏற்பட்ட போதில் மருத்துவர்கள் தன் நலம் பாராது கொரோனா நோயாளிகளுக்கு
சிகிக்சை அளித்தனர்.
இரவு, பகல் பாராது
காற்றுப்புகாத உடைகளை அணிந்து முறையாக மூச்சு விட கூட முடியாத நிலையில் கொரோனா
வார்டுகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். நாடு முழுவதும் ஏராளமான
மருத்துவர்கள் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மக்கள் உயிரை காப்பாற்றுவதற்காக
தன் குடும்பங்களை பிரிந்து மருத்துவமனையிலேயே தங்கி பணியாற்றினர். கொரோனா நோய்
தடுப்பில் மருத்துவர்களின் பங்கு இன்றியமையாததாகும்.
இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முக
பிரியாவுக்கு, சுதந்திர தினத்தன்று
தமிழக முதல்வர் துணிச்சலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கினார். இந்நிலையில் அரசு
மருத்துவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று அரசு மருத்தவ சட்ட போராட்ட குழு
தலைவர் பெருமாள் பிள்ளை முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
0 Response to "தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு – முதல்வருக்கு கோரிக்கை!"
Post a Comment