இந்தியாவில் 39,070 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி – 491 பேர் உயிரிழப்பு!

Trending

Breaking News
Loading...

இந்தியாவில் 39,070 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி – 491 பேர் உயிரிழப்பு!

இந்தியாவில் 39,070 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி – 491 பேர் உயிரிழப்பு!


நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை தாக்கம் குறைந்து வந்துள்ளதை அடுத்து
, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 39,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. 

கொரோனா பாதிப்பு: 

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2 அலை கடந்த மார்ச் மாதத்தில் இருந்து பரவ தொடங்கியது. 2ம் அலையின் உச்சகட்ட பாதிப்பு மே மாத தொடக்கத்தில் நாடு முழுவதும் இருந்தது. இதனால் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. பொது ஊரடங்கு அதிக கட்டுப்பாடுகளுடன் அமலுக்கு வந்தது. இதனால் ஒரு சில மாநிலங்களை தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் தொடர்ந்து அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 39,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை நாட்டின் மொத்த பாதிப்பு 3,19,34,455 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 491 பேர் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதனால் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 4,27,862 ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 43,910 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை நாடு முழுவதும் 3,10,99,771 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போதைய சூழ்நிலையில், நாடு முழுவதும் 4,06,822 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். 24 மணி நேரத்தில் 55,91,657 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் இதுவரை 50,68,10,492 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

0 Response to "இந்தியாவில் 39,070 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி – 491 பேர் உயிரிழப்பு! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel