தமிழகத்தில் மகளிர் சுய
உதவிக்குழுவினருக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும். மேலும் கூட்டுறவுத்துறையில்
உள்ள காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் ஐ பெரியசாமி
அவர்கள் அறிவித்துள்ளார்.
அமைச்சரின் அறிவிப்பு:
தமிழகத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் ஒரு திட்டமாகும். இதனால் அதிக அளவிலான கந்துவட்டி மற்றும் இதர வட்டி முறைகளில் இருந்து மக்களை அரசு காப்பாற்றி வருகிறது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தமிழக அரசு பல சலுகையிலான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை கொள்ளை விளக்க குறிப்பை தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
அப்போது பல அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளார். அதன்படி கணவரை இழந்த பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கடன் வழங்கப்படும், கூட்டுறவுத்துறை தொழில்பயிற்சி மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை அரசு தானே ஏற்கும் என்றும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 % வட்டியில் கடன் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்களில் உறுப்பினராக இருக்கும் பெண்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்க்கப்படுவார்கள்.
மகளிர் சுய உதவிக் குழுக்களில்
ரூ.3 லட்சம் வரையிலான கடன்களுக்கு வட்டி
விகிதம் 12%ல் இருந்து 3% ஆக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் 43,39,780 உறுப்பினர்கள்
பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார். மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் அளவு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்படும். மேலும், கூட்டுறவு துறையில் உள்ள 3939 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
0 Response to "தமிழக அரசு கூட்டுறவு துறையில் 3939 காலிப்பணியிடங்கள் – மகளிர் சுய உதவிக்குழு கடன் வட்டி குறைப்பு! "
Post a Comment