
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகத்தில் 2021- 2022 ஆம்
கல்வியாண்டிற்கான பிஎச்.டி., எம்.பில்., படிப்புகளுக்கான
மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதற்கு செப்டம்பர் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் 2021
– 2022ம் புதிய கல்வியாண்டு தொடங்கியது முதல்
கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அரசு மற்றும் தனியார் கலை
அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி, எம்.பில்., மாணவர் சேர்க்கை
நடைபெறுகிறது. சிறப்பான ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கில் அவர்களுக்கு முறையான
பயிற்சி அளிக்க 2008ம் ஆண்டு தமிழ்நாடு
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் சுமார் 700 தனியார் கல்வியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 700 தனியார் கல்வியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இக்கல்லூரிகளில் பி.எட்., எம்.எட்., படிப்புகள்
நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்கான பி எச்.டி., எம்.பில்., படிப்புகளுக்கு
விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
முழு நேர மற்றும் பகுதி நேர
எம்.பில்., படிப்புகளுக்கு
விண்ணப்பிக்க இணையதளம் மூலம் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விவரங்களை
பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்களை இணைத்து
பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர்
கல்வியியல் பல்கலைக்கழகம், கங்கை அம்மன் கோயில் தெரு, காரப்பாக்கம், சென்னை 600
097 என்ற முகவரிக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "பிஎச்.டி., எம்.பில் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் – தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம்!"
Post a Comment