
சென்னையில்
செயல்பட்டு வந்த 4 சுங்கச்சாவடிகள்
சட்டப்பேரவையில் அறிவித்த படி இன்று முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு
வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுங்கச்சாவடிகள்
கடந்த
10 ஆண்டுகளாக சென்னையில் உள்ள ஓஎம்ஆர் சாலையில் 4 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வந்தன. கடந்த 1999 ம் ஆண்டு சென்னையில் பல ஐடி நிறுவனங்கள் பெருக
ஆரம்பித்தது. அதிலும் குறிப்பாக சென்னை ஓஎம்ஆர் சாலையில் பல நிறுவனங்கள்
கட்டமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இதனால் கடந்த 2008 ஆம் ஆண்டு ஐடி எக்ஸ்பிரஸ்
சாலையாக மாறியது. கடந்த 13 ஆண்டுகளாக பெருங்குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், மேடவாக்கம் சாலை, கலைஞர் சாலை ஆகிய 5 இடங்களில் சுங்க சாவடிகள் அமைக்கப்பட்டு கட்டணங்கள்
வசூலிக்கப்பட்டு வந்தது.
20 கிலோமீட்டருக்கு மேல்
இருக்கும் இந்த சாலைகளில் இரவில் பல வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டு
பராமரிக்கப்பட்டு வந்தது. நாள் ஒன்றிற்கு 1 லட்சத்திற்கும் அதிகமான
வாகனங்கள் இந்த சாலைகளில் சென்று வருகின்றன. ஆனால், இந்த சாலைகளில் கட்டண வசூல்
மேற்கொள்ள கூடாது என்றும், சுங்கச்சாவடிகள் மூடப்பட
வேண்டும் என்றும் கோரிக்கைகள் மற்றும் போராட்டங்கள் வலுத்து வந்தது. இது ஒரு புறம்
இருக்க, சென்னையில் உள்ள பெருங்குடி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் மற்றும் மேடவாக்கம் சாலை ஆகிய பகுதிகளில் மெட்ரோ
ரயில் பணிகள் வேகமெடுத்து வருவதால் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தொடர்ந்து
வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தில்
அமைச்சர் ஏ.வெ.வேலு பேசுகையில் கூடிய விரைவில் சென்னையில் உள்ள 4 இடங்களில் வாகன ஓட்டிகளின் விருப்பப்படி சுங்கச்சாவடிகள்
மூடப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று முதல் மேற்கண்ட 4 சுங்க சாவடிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் சென்னையில் போக்குவரத்து
நெரிசல் குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
0 Response to "இன்று முதல் 4 சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் ரத்து – வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி!"
Post a Comment