
மத்திய
கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த பட்டியலின மாணவர்களுக்கு 2021 – 2022ம் கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள்
வரவேற்கப்பட்டு வருகிறது.
அரசு உதவித்தொகை:
தமிழகத்தில்
பட்டியலின மாணவர்களுக்கு அரசு பயனுள்ள நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது.
பட்டியலின மாணவர்கள், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்ட
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இவர்கள்
இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பெற்று சமுதாயத்தில் தனி அடையாளம் பெறுகின்றனர்.
மேலும் தமிழக அரசு மத்திய கல்வி நிறுவங்களான ஐஐடி மற்றும்
ஐஐஎம் என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பட்டியலின மாணவர்கள், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர் மிக
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 2 லட்ச ரூபாய் வரை கல்வி
உதவித்தொகைகள் வழங்குகிறது. இத்திட்டத்தில் தற்போது 2021 – 2022ம் ஆண்டிற்கான உதவித்தொகை பெற விண்ணப்பங்கள்
வரவேற்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற விரும்புவோர்
குடும்பத்தின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க
வேண்டும்.
இதற்கு தகுதியுடையோர் சிறுபான்மை நல அலுவலகம் அல்லது பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் இருந்து விண்ணப்பத்தினை பெற்று பூர்த்தி செய்யவும். இல்லையெனில் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தாங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தில் சமர்பிக்கவும். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு 044 – 28551462 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!"
Post a Comment