தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள
நிலையில் ஆகஸ்ட் மாத இறுதியில் முதல் கட்டமாக 5 முன்பதிவில்லா ரயில்கள் இயக்கப்படும்
என தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது.
ரயில்கள் இயக்கம்:
தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமெடுத்த காரணத்தால் கடந்த மே மாதம் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் பொது மக்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதை தடுக்க போக்குவரத்து சேவைகள் ரத்து செய்யப்பட்டது. வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டது. கொரோனா தொற்று பரவும் அச்சத்தால் மக்கள் வேலையின்றி வீடுகளில் முடங்கினர். இதனால் ரயில் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பயணிகள் வருகை இல்லாததால் பெரும்பாலும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டது.
இதனால் ரயில்வே துறை பெரும் சரிவை சந்தித்துள்ளது. பல்வேறு நோய் தடுப்பு பணிகள் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. அதனால் அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. மக்கள் மீண்டும் அலுவலகங்கள் மற்றும் பிற பணிகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். அதனால் ரயில் பயணிகளின் வசதிக்காக ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்கள் மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில்களில் மக்கள் கூட்டத்தை சமாளிக்க முன்பதிவு அடிப்படையில் பயணம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் முன்பதிவில்லா
ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டு வருகிறது. முதற்கட்டமாக நடப்பு மாத இறுதியில் பயணிகளின்
அவசர தேவைகளுக்காக முன்பதிவில்லாத ரயில்கள் 5 இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அதன்படி திருச்சி - காரைக்கால், திருவாரூர் -
மயிலாடுதுறை, மதுரை -
செங்கோட்டை, எர்ணாகுளம் -
கொல்லம்
உள்ளிட்ட இரு வழித்தடங்களிலும் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
0 Response to "தமிழகத்தில் இம்மாத இறுதியில் 5 முன்பதிவு இல்லா ரயில்கள் இயக்கம் - தெற்கு ரயில்வே! "
Post a Comment