
திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர்
வைக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அறிவித்துள்ளார்.
கருணாநிதி பெயர்:
தமிழக சட்டப்பேரவையில் இன்று பள்ளிக் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை
மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நீட் தேர்வு விவகாரம்
குறித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அரசு பள்ளிகளை சேர்ந்த
மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பித்து சட்டம்
இயற்றினார். அதனை தொடர்ந்து தற்போது தமிழக முதல்வர் தொழிற்கல்வி படிப்புகளுக்கு இட
ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
அதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு முக்கிய இடங்களுக்கு தியாகிகளின்
பெயர்களை வைக்க கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். சிலர்
தங்கள் ஜாதி தலைவர்களின் பெயர்களை சில முக்கிய இடங்களுக்கு பொறிக்க வலியுறுத்தி
வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கு முன்னாள் முதல்வர்
கருணாநிதி பெயர் வைக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி
அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் வைக்க
வேண்டும் என கலசபாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் கோரிக்கை வைத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று அமைச்சர் பொன்முடி இந்த பெயர் மாற்றத்தை அறிவித்துள்ளது
குறிப்பிடத்தக்கது. மறைந்த முன்னாள் முதல்வர் மு.க.கருணாநிதி அவர்களின் நினைவிடம்
கட்டுவதற்கான வரைபடம் வெளியானதை தொடர்ந்து தற்போது திருவண்ணாமலை அரசு கல்லூரிக்கு
முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் குறித்த அறிவிப்பு தொண்டர்களை குஷிப்படுத்தி
வருகிறது.
0 Response to "அரசு கல்லூரிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் – அமைச்சர் அறிவிப்பு!"
Post a Comment