
இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டு தோறும்
சுமார் ரூ.6,000 நிதியுதவி மத்திய
அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதன் 9 ஆவது தவணை நிதி வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 9) துவங்கி வைக்க உள்ளார்.
விவசாய நிதி
மத்திய அமைச்சகத்தின் ‘பிரதமர் கிஷான்’ திட்டத்தின் கீழ் ஆண்டு
தோறும் சுமார் ரூ.6 ஆயிரம் நிதி
தொகையானது தகுதியிடைய விவசாயிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த
மொத்த தொகையானது ஒரு ஆண்டிற்கு மூன்று முறை என்ற அளவில் ரூ.2000 என நான்கு மாத தவணைகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இப்பணமானது
கடந்த 8 தவணைகளாக
விவசாயிகளின் வங்கி கணக்குக்கு நேரடியாகவே அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில்
இத்திட்டத்தின் 9 ஆவது தவணை நிதி
வழங்கும் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி ஆன்லைன் வழியாக துவங்கி வைக்க
உள்ளார்.
அந்த வகையில் ‘பிரதம மந்திரி கிசான் சம்மன்’ நிதி (PM-KISAN)
திட்டத்தின் கீழ் அடுத்த தவணை நிதியை, இன்று (ஆகஸ்ட் 9) பகல் 12.30 மணியளவில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் வெளியிடுகிறார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார்.
இதனுடன் மத்திய விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமரும் இதில் கலந்து கொள்ள
இருக்கிறார். இந்த நிதி உதவி மூலம் ரூ.19,500 கோடிக்கும் அதிகமான பணம் சுமார் 9.75 கோடி விவசாய குடும்பங்களுக்கு சென்றடைய உள்ளது.
இந்த வழக்கத்தின் படி இந்த நிதித் தொகையானது நேரடியாக பயனாளிகளின் வங்கி
கணக்குகளுக்கு மாற்றப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.1.38
லட்சம் கோடிக்கு மேற்பட்ட பணம், ஆயிரக்கணக்கான தகுதியுடைய விவசாய குடும்பங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக கடந்த மே 14 ஆம் தேதி அன்று, பிரதமர் மோடி கிசான்
சம்மன் நிதி திட்டத்தின் 8 வது தவணை நிதி வெளியிடப்பட்டது. அதன் படி கடைசி தவணையை சுமார் 90 மில்லியன் விவசாய குடும்பங்கள் பெற்றுள்ளது கூடுதல் தகவல்.
0 Response to " மத்திய அரசு வழங்கும் 9வது தவணை ரூ.2000 நிதி – பிரதமர் மோடி இன்று துவக்கம்!"
Post a Comment