
கொரோனா தொற்று தாக்கத்தின் காரணமாக அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதால்
சென்டாக் விண்ணப்பங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு இலவசமாகவும் பிற
மாநிலத்தவர்களுக்கு கட்டணத்துடன் வழங்குவதாக முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது
குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இலவச சென்டாக் விண்ணப்பம்:
கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கும்
நிலையில் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை மற்றும் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
தற்போது புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவம், பொறியியல், கலை – அறிவியல்
கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, ‘சென்டாக்’ மூலம் நடத்தப்பட்டது. இந்த ஆண்டிற்கான கவுன்சிலிங் ஏற்பாடுகளை சென்டாக் முடக்கியுள்ள
நிலையில் இன்ஜினியரிங், கலை – அறிவியல்
படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்களை மட்டும் ஆன்லைனில் வழங்குவதாக
திட்டமிடப்பட்டுள்ளது.
இலவசமாக வழங்கப்படும் இந்த சென்டாக் விண்ணப்பத்திற்கு ஒரு முறை மட்டும்
பதிவு கட்டணம் வசூலிக்கப்படும். கடந்த ஆண்டும் நோய் தொற்றால் அதிகம்
பாதிக்கப்பட்டு இருந்ததால் பதிவு கட்டணம் இல்லாமல் விண்ணப்பங்கள் இலவசமாக
வழங்கப்பட்டு வந்தது. இந்த ஆண்டும் அதிகமான பாதிப்பு காரணமாக புதுச்சேரி மாணவர்களுக்கு
மட்டும் இலவசமாக வழங்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்புகள்
இந்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் நேரத்தில் மற்ற
மாநிலத்தவர்களுக்கு விண்ணப்ப பதிவு கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இன்ஜினியரிங் படிப்புக்கு பொது பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு 500
ரூபாய் மற்றும் SC/ST மாணவர்களுக்கு 250 ரூபாய்
வசூலிக்கப்படும். அதே போல் கலை -அறிவியல் படிப்புக்கு பொது பிரிவை சேர்ந்த
மாணவர்களுக்கு 300 ரூபாய் மற்றும் SC/ST
மாணவர்களுக்கு 150 ரூபாய் என வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "புதுச்சேரி மாணவர்களுக்கு இலவச சென்டாக் விண்ணப்பம் – அரசு முடிவு! "
Post a Comment