தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகள் திறப்பு – ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகள் திறப்பு – ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!

தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகள் திறப்பு – ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!


கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகள் இன்று வரை திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பெரிதும் பாதிக்கப்படுவதால் ஆரம்ப பள்ளிகளை விரைவாக திறக்க வேண்டும் என அரசுக்கு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
 
பள்ளிகள் திறப்பு:
 
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா தொற்றின் தாக்கத்தை குறைக்கவும், மக்களை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் முதற்கட்டமாக பள்ளி மாணவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக பள்ளிகள் மூடப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்டதன் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. பல்வேறு சிரமங்கள் இருந்தாலும் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது.
 
 
இதனை தொடர்ந்து ஆன்லைன் மூலம் தேர்வுகளும் நடத்தப்பட்டது. இது போன்று பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால் மாணவர்களின் கல்வி நிலை பாதித்து வருகிறது. மேலும் இதனால் பள்ளி மாணவர்கள் பலர் தங்கள் பள்ளி படிப்பை நிறுத்தி வேலைக்கு செல்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் குழந்தை தொழிலாளர்கள் அதிகளவில் உருவாகி உள்ளது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகளின் கல்வி மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் திறப்பது அவசியமாகிறது.
 
 
போதிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் பள்ளிகளை திறப்பதன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை சீர் செய்ய முடியும். ஆரம்ப கல்வி பயிலும் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதால் முதலில் ஆரம்ப பள்ளிகளை திறக்க வேண்டும் என்றும், கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் நடைபெறாததால் ஆசிரியர்களின் பதவி உயர்வும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது என தமிழக அரசுக்கு ஆசிரியர் கூட்டணி தனது கோரிக்கையை முன்வைத்துள்ளது.

0 Response to "தமிழகத்தில் ஆரம்ப பள்ளிகள் திறப்பு – ஆசிரியர் கூட்டணி கோரிக்கை!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel