
ஜனாதிபதி மாளிகையில் இன்று 9 நீதிபதிகள் பதவியேற்றனர். உச்ச நீதிமன்ற
வரலாற்றில் ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவியேற்பது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.
பதவியேற்பு:
இந்த மாதத்தில் மூத்த நீதிபதிகள்
ரோகிண்டன் பாலி நாரிமன் மாற்று நவீன் சின்ஹா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்றனர்.
இதனால் 26
ஆக இருந்த
நீதிபதிகளின் எண்ணிக்கை தற்போது 24 ஆக குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து உச்ச
நீதிமன்றத்துக்கு புதிதாக 9 புதிய நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என தலைமை நீதிபதி என்.வி.ரமணா
தலைமையிலான கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்தார்.
இந்த பட்டியலில் கர்நாடக உயர் நீதிமன்ற
தலைமை நீதிபதி அபய் ஸ்ரீநிவாஸ் ஓகா, குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
விக்ரம் நாத், சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜிதேந்திர குமார் மகேஸ்வரி, தெலங்கானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி
ஹிமா கோலி,
கர்நாடக உயர்நீதிமன்ற
நீதிபதி பி.வி.நாகரத்னா, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி.ரவிக்குமார், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி
எம்.எம்.சுந்தரேஷ், குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி பெலா திரிவேதி ஆகியோர் பெயர்கள் இடம்
பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது உச்ச நீதிமன்ற
வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து நேரடி நியமன அடிப்படையில், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அரசு கூடுதல் வழக்கறிஞருமான
பி.எஸ்.நரசிம்மாவின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரையை முழுமையாக
ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 9 புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு
ஒப்புதல் வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து இந்த 9 நீதிபதிகளும் இன்று ஜனாதிபதி மாளிகையில்
நடைபெற்ற நிகழ்ச்சியில் பதவி ஏற்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி
பிரமாணம் செய்து வைத்துள்ளார். உச்ச நீதிமன்ற வரலாற்றில் ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவி ஏற்றுக் கொள்வது இதுவே
முதன்முறை ஆகும்.
0 Response to "ஒரே நாளில் 9 நீதிபதிகள் பதவியேற்பு – உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறை!"
Post a Comment