
தமிழ்நாடு அரசின்
நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு
வெளியிடப்படும் எனவும் அதனை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடுவார்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிநிலை அறிக்கை:
தமிழகத்தில் திமுக
ஆட்சி பொறுப்பேற்று பல மாதங்கள் ஆன நிலையில் 2021-22 ஆம் ஆண்டுக்கான
பட்ஜெட் மற்றும் நிதிநிலை அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற
எதிர்பார்ப்பு மக்களிடம் இருந்தது. கடந்த ஆட்சியின் போது பிப்ரவரி மாதம் தேர்தல்
காரணமாக இடைக்கால நிதிநிலை அறிக்கை மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், புதிதாக ஆட்சி
பொறுப்பேற்றுள்ள திமுக அரசு முழு நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இதற்கு
துறை ரீதியான ஆய்வு கூட்டங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மேற்கொண்டார்.
மேலும் நிதிநிலை
அறிக்கை தாக்கல் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெள்ளை
அறிக்கை தாக்கல் செய்யப்படும் என கடந்த 10 ஆண்டு கால நிதி
அறிக்கையில் 120 பக்க வெள்ளை அறிக்கையை அவர்
வெளியிடுகிறார். இந்த ஆண்டு நிதி அறிக்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு
தொழிற்கல்வி படிப்புகளில் 7.5% ஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அமைச்சரவை
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்பை
தொடர்ந்து பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டப் படிப்புகளில்
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% ஒதுக்கீடு வழங்க
முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல்
தியாகராஜன் தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக மு.க.
ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக தமிழக அரசின் பட்ஜெட்
ஆகஸ்ட் 13
ஆம்
தேதி தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Response to "தமிழக அரசின் நிதிநிலை வெள்ளை அறிக்கை – ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியீடு!"
Post a Comment