
ஆதார் எண்ணை பிஎஃப்
கணக்குடன் இணைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கால அவகாசம்
வழங்கப்பட்டுள்ளது. இதை செய்யாவிட்டால் ரூ.1000 முதல் 10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஎஃப்
கணக்கு :
இந்தியாவில் அரசு
மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாத
ஊதியத்திலிருந்து பிஎப் தொகைக்காக குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படுகிறது.
இதனுடன் நிறுவனங்கள் கூடுதலாக தொகையை வரவு வைத்து வருகிறது. இந்த தொகை அவர்கள்
ஓய்வு பெறும் போது ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வப்போது ஈபிஎஃப்ஓ இதில்
மாற்றங்களை அறிவித்து வருகிறது.
சமீபத்தில் மருத்துவ உதவித்தொகைகளுக்காக எந்த ஆவணங்களும் இன்றி 1 லட்சம் வரை வரை பிஎப் கணக்கிலிருந்து
எடுக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜூன் மாதத்தில் 12.8 லட்சம் பிஎப் கணக்குகள்
சேர்க்கப்பட்டுள்ளதாக பணியாளர் சேமநல நிதி நிறுவனம் தகவல் அளித்துள்ளது. அதன்
பிறகு ஆதார் எண்ணை பி.எப் கணக்குடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று
அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த நடைமுறைக்கு ஜூன் 1 ஆம் தேதி வரை கால அவகாசமும்
வழங்கப்பட்டது.
மேலும் கொரோனா ஊரடங்கு காரணத்தால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1ஆம் தேதிக்கு வரை பிஎப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது அதற்குள் ஆதார் எண்ணை பிஎப் கணக்குடன் இணைக்க விட்டால் அவர்களது பிஎப் கணக்கும் முடக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், ரூபாய் 1000 முதல் 10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
0 Response to "“இதை” செய்யவிட்டால் பிஎஃப் கணக்கு முடக்கப்படும் – முக்கிய அறிவிப்பு!"
Post a Comment