கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி – முதல்வர் அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி – முதல்வர் அறிவிப்பு!

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி – முதல்வர் அறிவிப்பு!


புதுச்சேரியில்
2021-2022 ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

கடன் தள்ளுபடி :

புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 2021 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் போட்டியிட்டு என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி பெற்றது. இதனையடுத்து தலைவர் ரங்கசாமி புதுச்சேரியின் முதல்வராக பதவியேற்றார். அதன் பிறகு புதுச்சேரியில் கொரோனா தொற்றை ஒழிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் தற்போது புதுச்சேரியில் கொரோனா பரவல் எதிர்பார்த்த அளவு குறைந்துள்ளது. இந்த நிலையில் முதல்வரும், நிதித்துறை அமைச்சருமான ரங்கசாமி 2020-2021 ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை இன்று பேரவையில் தாக்கல் செய்தார்.

ரூபாய் 9,924 கோடிக்கு பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். இந்த நிதி நிலை அறிக்கையில் ரூபாய் 795.88 கோடி சுகாதாரத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் மீனவ மாணவர்களுக்கு ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் மீன்வளத்துறை நூலகம் சீரமைக்கப்படும். கல்வித்துறைக்கு ரூ.742 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், உயர்கல்வித்துறைக்கு ரூ.296 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.


இந்த பட்ஜெட் முக்கிய அம்சமாக மேலும், ஆதிதிராவிடர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்றும் புதுச்சேரி கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வார விடுமுறை நாட்களை தவிர்த்து ஏழு நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Response to "கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் தள்ளுபடி – முதல்வர் அறிவிப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel