தமிழ் வழியில் பொறியியல் படிப்புகள், அண்ணாமலை பல்கலை தேர்வு முடிவுகள்- அமைச்சர் அறிவிப்பு!

Trending

Breaking News
Loading...

தமிழ் வழியில் பொறியியல் படிப்புகள், அண்ணாமலை பல்கலை தேர்வு முடிவுகள்- அமைச்சர் அறிவிப்பு!

தமிழ் வழியில் பொறியியல் படிப்புகள், அண்ணாமலை பல்கலை தேர்வு முடிவுகள்- அமைச்சர் அறிவிப்பு!


தமிழ் வழியில் பொறியியல் சார்ந்த படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சட்டசபையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இன்று .அறிவித்து உள்ளார்.

புதிய படிப்புகள்:

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த சில நாட்களுக்கு முன் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று கூட்டுறவு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த விவாதங்கள் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், பள்ளி மற்றும் உயர்கல்வித்துறை சார்பாக விவாதங்கள் இன்று சட்டசபை உறுப்பினர்களால் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்க உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி எழுந்து பேசினார்.

தமிழ் வழியில் தொடங்கப்பட உள்ளன. இதில் முதற்கட்டமாக, சிவில், மெக்கானிக்கல் போன்ற படிப்புகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்தார். மேலும் இரண்டு ஆண்டு தொழிற்படிப்புகள் (டிப்ளமோ) முடித்தவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டு பட்டப் படிப்பில் சேர்வது போல், பி.காம் பட்டப்படிப்பிலும் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு வழிவகை செய்யப்படும் எனவும் அறிவித்தார். இது மட்டுமல்லாமல் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்பதையும் தெரிவித்தார்.


இதோடு சேர்த்து, புதிதாக திருவண்ணாமலை, சேலம், சிவகங்கை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் திறந்தவெளி பல்கலைக்கழகம் மண்டல மையங்கள் அமைக்கப்படும் என உறுதியளித்தார். திறந்தவெளி பல்கலைக்கழகம் என்பது எழுத்தறிவு இல்லாதவர்கள் கூட இதன் மூலம் படிப்படியாக பட்டப்படிப்பு வரை கற்கலாம் என்பது இதன் சிறப்பம்சமாகும். இதன் மூலம் மாநிலத்தில் கல்வி கற்போரின் வளர்ச்சி வீதம் அதிகரிக்கும் என தெரிவித்தார். மேலும், சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட அண்ணா பல்கலைக்கழகம் செமஸ்டர் தேர்வு முடிவு நாளைக்குள் வெளியிடப்படும் என்றும் உறுதியளித்தார்.

0 Response to "தமிழ் வழியில் பொறியியல் படிப்புகள், அண்ணாமலை பல்கலை தேர்வு முடிவுகள்- அமைச்சர் அறிவிப்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel