வீட்டு கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வட்டி குறைவு!

Trending

Breaking News
Loading...

வீட்டு கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வட்டி குறைவு!

வீட்டு கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வட்டி குறைவு!

 


நாட்டில் உள்ள முக்கிய வங்கியான எஸ்.பி.ஐ வழங்கும் வீட்டுக்கடன் தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
 
வீட்டுக்கடன்:
 
வசதி படைத்தவர்கள் மட்டுமின்றி சாமானிய மக்களின் சொந்த வீட்டு கனவையும் நிறைவேற்றுவதில் வீட்டுக்கடன் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் சில நிறுவனங்கள் மிகவும் குறைந்த நியாயமான விகிதத்தில் வட்டி தொகையை நிர்ணயிக்கிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளும் முதல் வீட்டிற்கு குறிப்பிட்ட அளவிற்கு மானியம் வழங்குகிறது. மேலும், ஏறத்தாழ 16 வங்கிகள் மற்றும் வீட்டு நிதி நிறுவனங்கள் 7 சதவீதத்திற்கும் குறைவான வட்டி விகிதத்திதில் வீட்டு கடன்களை வழங்கி வருகிறது.
 
 
RBI அதன் பணக்கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், ‘ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை என தெரிவித்தது. இதனால் வங்கிகள் வழங்கும் கடன்களின் வட்டி விகிதம் குறைக்கப்படுமா அல்லது கொரோனா காலத்திலும் வட்டி விகிதம் அதிகரிக்கப்படுமா என்று சாமானியர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில், எஸ்.பி.ஐ வங்கி தனது நிறுவனத்தின் வீட்டுக்கடன் திட்டத்திற்கு 6.70% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
இதில் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ஷ்டவசமாக மற்றொரு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதவாது, பருவ மழைக் கால சலுகை திட்டத்தின் கீழ் வீட்டுக்கடனுக்கான பரிசீலனை கட்டணம் ஆகஸ்ட் 31ம் தேதி வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொதுவாக 0.40% பரீசீலினை கடனமாக வசூலிக்கப்படும். தொடர்ந்து, 2019 அக்டோபர் முதல் தேதிக்கு முன்னதாக வீட்டுக் கடன் வாங்கியவர்களும், எம்.சி.எல்.ஆர்., அடிப்படையிலிருந்து கடனை, ரெப்போவுடன் இணைக்கப்பட்ட ஆர்.எல்.எல்.ஆர்., விகிதத்துக்கு மாற்றிக் கொள்ளும் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

0 Response to "வீட்டு கடன் வாங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வட்டி குறைவு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel