தனியார் கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

Trending

Breaking News
Loading...

தனியார் கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தனியார் கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

 


தமிழகத்தில் ஆகஸ்ட்
9ம் தேதி முதல் பேராசிரியர்கள் கல்லூரிகளுக்கு வேலை நாட்களில் கண்டிப்பாக வருகை புரிய வேண்டும் என உயர்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஆன்லைன் வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளது. இதனால் கல்லூரிகளில் உள்ள பேராசிரியர், அலுவலக பணியாளர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.
 
தனியார் கல்லூரி வேலைவாய்ப்பு:
 
தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் PSG தனியார் டெக்னாலாஜி கல்லூரியில் முதல்வர் (Principal) பணியிடத்திற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. 1951 ஆம் ஆண்டு முதல் இக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. கல்லூரி முதல்வர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் (AICTE) விதிகளுக்கு உட்பட்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
 
அதன்படி இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் Ph.D பட்டப்படிப்பு மற்றும் B.E. / B.Tech. / B.S. அல்லது M.E. / M.Tech. / M.S. அல்லது ஒருங்கிணைந்த M.Tech. முதல் வகுப்பில் அரசின் அங்கீரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதுமட்டுமின்றி குறைந்தபட்சம் 2 வருடம் PhD மேற்பார்வையாளராக அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 15 வருடங்கள் ஆசிரியர் / ஆராய்ச்சி அல்லது தொழில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இல்லையெனில் குறைந்தபட்சம் 3 வருடம் பேராசிரியருக்கு இணையான பதவியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
 
 
மேற்கூறிய தகுதி உடையவர்கள் கல்லூரியின் அதிகாரபூர்வ வலைத்தளமான www.psgtech.edu இல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Response to "தனியார் கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel