
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்
அவர்களுக்கு சென்னை மெரினாவில் உதயசூரியன் வடிவில் நினைவிடம் அமையவிருக்கிறது.
அதற்கான மாதிரி படம் வெளியிடப்பட்டுள்ளது.
நினைவிடம் :
தமிழக முதல்வராக சிறப்பாக ஆட்சி
செய்தவர் தான் திரு.மு.க.கருணாநிதி. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின்
இறப்பு அனைவரையும் பெரும் துக்கத்தில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது. அவரது உடல்
சென்னை மெரினாவில் புதைக்கப்பட்டது அனைவரும் அறிந்த ஒன்று. அவரது நினைவு
மண்டபமானது உதயசூரியன் வடிவில் கட்டப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி ஒரு எழுத்தாளர்
என்பதை நினைவு கூறும் வகையில் நினைவிடத்தின் முகப்பில் பேனா வடிவில் பிரம்மாண்ட
தூணும் அமைக்கப்படுவதாக மாதிரி வடிவத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ரூ.39 கோடியில் 2.23 ஏக்கரில்
சென்னை மெரினா கடற்கரையில் கலைஞருக்கு நினைவிடம் கட்டப்படும் என்றும், கலைஞரின்
வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களும் அந்த நினைவிடத்தில் அமையும் என்றும்
இன்று பேரவையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதற்கான
மாதிரி வடிவமைப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தற்போது நடந்து முடிந்த தேர்தலில்
திமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு
நினைவிடம் உதயசூரியன் வடிவத்தில் கட்டப்பட உள்ளது. மேலும் அவர் பயன்படுத்திய பேனாவும்
பிரம்மாண்ட தூணாக நிற்கப் போகிறது என கூறப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரைக்கு
வரும் மக்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதியின் நினைவிடங்களுக்கு சென்று வணங்கி விட்டு செல்கின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "மெரினாவில் கலைஞர் கருணாநிதிக்கு நினைவிடம் – மாதிரி வரைபடம் வெளியீடு!"
Post a Comment