
தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்
தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்
என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழ் :
தமிழகத்தில் ஆசிரியர்கள் அரசு
பள்ளிகளில் பணிபுரிய ஆசிரியர் தேர்வாணையத்தால் (டெட்) என்னும் தகுதி தேர்வு
நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு அரசு மற்றும் அரசு உதவி
பெறும் பள்ளிகளில் பணி நியமனம் வழங்கபடுகிறது. அதே போல இந்த தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களுக்கு தேர்வாணையத்தால் தகுதி சான்றிதழ் வழங்கப்படும். இது 7 ஆண்டுகள் வரை
செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டது. கடந்த வருடங்களில் டெட் தேர்வில் தேர்ச்சி
பெற்ற சிலருக்கு பணி வழங்கப்படவில்லை.
தற்போது அவர்களின் தேர்ச்சி சான்றிதழ்
காலாவதி ஆகிவிட்டது. இதனை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சகம் கடந்த மே மாதம்
ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ்கள், இனி ஆயுள்
முழுதும் செல்லும் என அதிகாரபூர்வமாக அறிவித்தது. ஆனால் தமிழக அரசு இதற்கான எந்த
அறிவிப்புகளையும் வெளியிடவில்லை. இது குறித்து தேர்வு எழுதிய ஆசிரியர்கள் கேள்வி
எழுப்பினர். தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின்
சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என்ற ஆணையை அரசு வெளியிட வேண்டும்.
மேலும் அவர்கள் பணிகளில் சேர அரசு உதவ
வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மத்திய
அரசின் அறிவிப்பை ஏற்று தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி
பெற்றவர்களின் தகுதி சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்று தமிழக
அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அதற்கான அரசாணை
வெளியிட்டுள்ளது. அதில் 2011-
ஆம் ஆண்டில் இருந்து தேர்வு எழுதியவர்களுக்கும் ஆயுள்
முழுவதும் TET சான்றிதழ் செல்லும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Response to "TET ஆசிரியர் தகுதித்தேர்வு வாழ்நாள் முழுவதும் செல்லும் – அரசாணை வெளியீடு!"
Post a Comment