தமிழக போக்குவரத்து கழகத்தில் அதிகாரிகள் பணிநீக்கம்? போலி சான்றிதழ் எதிரொலி!

Trending

Breaking News
Loading...

தமிழக போக்குவரத்து கழகத்தில் அதிகாரிகள் பணிநீக்கம்? போலி சான்றிதழ் எதிரொலி!

தமிழக போக்குவரத்து கழகத்தில் அதிகாரிகள் பணிநீக்கம்? போலி சான்றிதழ் எதிரொலி!


தமிழகத்தில் போலிச் சான்றிதழ்களை சரிபார்க்காமல் பணி நியமனம் வழங்கிய போக்குவரத்து துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு :

தமிழகத்தில் கடந்த 2003 ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் ஓட்டுநராக பணியாற்றிய சீனிவாசன் போலி சான்றிதழ்களை வைத்து பணியில் சேர்ந்தாக கூறி போக்குவரத்துக் கழகம் அவரை பணி நீக்கம் செய்ய உத்தரவிட்டது . மேலும் இதை வேலூர் தொழிலாளர் நல நீதிமன்றமும் உறுதி செய்தது. போக்குவரத்து கழக உத்தரவிற்கு எதிராக சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், போலி சான்றிதழ் அளித்தும் சிலர், சிறிய தண்டனைகளுடன் தொடர்ந்து பணி புரிகின்றனர் இந்த நிலையில் தன்னை மட்டும் பணி நீக்கம் செய்து பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு போக்குவரத்துக் கழகம் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கானது இன்று நீதிபதி வைத்தியநாதன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதில் மனுதாரர் போலி சான்றிதழ்களை சமர்ப்பித்தது ஆதாரங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் மீண்டும் பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது அவரை பணி நீக்கம் செய்தது சட்ட ரீதியான நடவடிக்கை தான் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் போலி சான்றிதழ் சமர்பித்தவர்களுக்கு பணி வழங்கிய போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

0 Response to "தமிழக போக்குவரத்து கழகத்தில் அதிகாரிகள் பணிநீக்கம்? போலி சான்றிதழ் எதிரொலி!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel