இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி – புதிய சாதனை!

Trending

Breaking News
Loading...

இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி – புதிய சாதனை!

இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி – புதிய சாதனை!


கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் ஒரு கோடி தடுப்பூசி போட்டு இமாலய சாதனை படைத்துள்ளது.

சாதனை:

கொரோனா தொற்று தமிழகத்தில் பெருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது. அதனை குறைக்கும் பணியில் தடுப்பூசி முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை என மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

தற்போது 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி 92 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் அதிகபட்சமாக போடப்பட்டன என ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 25ம் தேதி 84 லட்சம் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் நேற்று ஒரே நாளில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் (1,00,64,032) தடுப்பூசி டோஸ் போட்டுள்ளார் என அவர் கூறினார்.

கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது நாள் ஒன்றுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகிறது. 24 மணி நேரத்தில், 46,761 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இறந்தவர்களின் எண்ணிக்கை 512 ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


0 Response to "இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி – புதிய சாதனை!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel