மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் – முதல்வர் முக ஸ்டாலின் உறுதி!

Trending

Breaking News
Loading...

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் – முதல்வர் முக ஸ்டாலின் உறுதி!

மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் – முதல்வர் முக ஸ்டாலின் உறுதி!

 


தமிழகத்தை பொறுத்தவரையில் மெட்ரோ ரயில் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் நிச்சயம் திட்டம் நிறைவேற்றப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் சட்டசபையில் உறுதி அளித்துள்ளார்.
 
மெட்ரோ ரயில் திட்டம்:
 
நாட்டில் உள்ள ஒரு சில மாநிலங்களில் உள்ள பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் நடைமுறையில் உள்ளது. மெட்ரோ ரயில் உள்ள நகரங்கள் மெட்ரோ சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போதைக்கு சென்னையில் மட்டுமே இந்த திட்டம் நடைமுறையில் உள்ளது. சட்டசபை தேர்தல் வாக்குறுதியில் தமிழகத்தில் மதுரை, கோவை போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 
தற்போது தமிழகத்தில் கடந்த 13ம் தேதி நிதியமைச்சர் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 14ம் தேதி உழவர் நலத்துறை அமைச்சர் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆகஸ்ட் 18ம் தேதியான இன்று தமிழக அரசின் பட்ஜெட் மீதான பொது விவாதம் கலைவாணர் அரங்கில் நடந்தது. இந்த விவாதத்தில் கோவை மாவட்ட தெற்கு தொகுதி சட்டசபை உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமா என்று கேள்வி எழுப்பினார். முதல்வர் முக ஸ்டாலின் இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போது, இதுவரையிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் மத்திய அரசின் நிதியுதவி பெற்று தான் நடந்து வருகிறது.
 
 
சென்னையின் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்காக மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்திக்கும் போது, தமிழக மெட்ரோ ரயில் திட்டம் பற்றி கோரிக்கை வைத்தேன். கோவையில் இந்த திட்டம் செயல்படுத்துவதற்கும் மத்திய அரசுக்கு வலியுறுத்துவோம். இதே போல், மதுரை மற்றும் முன்னதாக அறிவிக்கப்பட்டுள்ள மற்ற பகுதிகளிலும் மெட்ரோ ரயில் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார்.

0 Response to "மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் – முதல்வர் முக ஸ்டாலின் உறுதி!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel