தமிழக அரசு தொழில்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியீடு – முழு விபரங்கள் இதோ!

Trending

Breaking News
Loading...

தமிழக அரசு தொழில்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியீடு – முழு விபரங்கள் இதோ!

தமிழக அரசு தொழில்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியீடு – முழு விபரங்கள் இதோ!


தொழில்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. இதில் மருத்துவ உபகரண தொழிற்பூங்கா
150 ஏக்கரில் உருவாக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் அறிவித்துள்ளார்.

அரசு தொழில்துறை:

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல் முறையாக 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றினார். மறுநாள் வேளாண்மைத் துறைக்கென முதன்முதலில் தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது துறை வாரியாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இன்று தொழில் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகே ஒரக்கடத்தில் மருத்துவ உபகரண தொழிற்பூங்கா 150 ஏக்கரில் உருவாக்கப்படும் என தொழில்துறை கொள்கை குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தொழில் துறையில் வளர்ச்சி அடைய பல்வேறு நலத்திட்டங்கள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் பேசிய அவர், ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் சிப்காட் தொழில் பூங்காவில் 250 ஏக்கரில் தோல் பொருள் தொழிற்பூங்கா ஏற்படுத்தப்படும் என்றும் நாட்டிலேயே முதல்முறையாக தூத்துக்குடியில் பன்னாட்டு அறைக்கலன் பூங்கா 100 ஏக்கரில் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா காலத்தில் வேலையில்லா சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்த திட்டம் பெரிதும் வரவேற்பு பெற்றுள்ளது.

0 Response to "தமிழக அரசு தொழில்துறையில் புதிய அறிவிப்புகள் வெளியீடு – முழு விபரங்கள் இதோ!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel