சென்னை மாநகராட்சி வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு – விதிகளை மீறினால் அபராதம்!

Trending

Breaking News
Loading...

சென்னை மாநகராட்சி வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு – விதிகளை மீறினால் அபராதம்!

சென்னை மாநகராட்சி வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு – விதிகளை மீறினால் அபராதம்!


சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்
, பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத ஓட்டல்கள், திருமண மண்டபங்கள் மற்றும் விருந்து அரங்கங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாநகராட்சி அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைவாக இருந்தாலும் மூன்றாம் அலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன் படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

ஓட்டல்கள், கல்யாண மண்டபங்கள், விருந்து அரங்கங்கள், சமூக நலக்கூடங்கள் ஆகியவற்றில் பதிவு செய்யப்படும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை மாநகராட்சிக்கு http://covid19.chennaicorporation.gov.in/covid/marriagehall/ என்ற இணையதள இணைப்பின் வாயிலாக தெரியப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். திருமண மண்டப நுழைவாயில்களில் கைகளை சுத்தம் செய்ய கிருமிநாசினிகளை வைத்திருக்க வேண்டும். அதேபோல உணவகங்களில் அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவிகித இருக்கைகளுடன் வாடிக்கையாளர்களை அனுமதிக்க வேண்டும்.

முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் மற்றும் கைகளை சுத்தம் செய்தல் போன்றவற்றை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் பொழுது முகக்கவசம் அணியாத தனிநபர்களுக்கு ரூ.200 அபராதமும், அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் சுபநிகழ்ச்சிகளில் 50 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் மண்டப உரிமையாளர்களுக்கு அபராதமும், உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டால் உணவக உரிமையாளர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


 

0 Response to "சென்னை மாநகராட்சி வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு – விதிகளை மீறினால் அபராதம்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel