
தமிழகத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன், விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை
இணைக்கும் மசோதாவுக்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழகம் இணைப்பு:
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில்
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை பிரித்து விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டு
டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு
நிதி ஒதுக்கி, பதிவாளரை நியமிக்கக் கோரியும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி
வந்துள்ளது. மறுபுறம் ஜெயலலிதா பல்கலைக்கழகத்திற்கான நிதி ஒதுக்கீடு, கட்டுமானம் உள்ளிட்ட பணிகள் நடைபெறவில்லை.
அதனால் ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்க முடிவு
செய்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டத்திருத்த மசோதாவை இன்று
சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
இதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும்
எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் அதிமுகவினர்
சட்டப்பேரவையில் ஜெயலலிதா பல்கலைக்கழகம் செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என கோரிக்கை விடுத்தனர். மசோதாவை ஆரம்ப நிலையிலேயே எதிர்ப்பதாக எதிர்க்கட்சி
துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அதிமுக
உறுப்பினர்கள் சட்டசபையை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு
நிலவியது.
0 Response to "அண்ணாமலை பல்கலையுடன் ஜெயலலிதா பல்கலை இணைப்பு – அதிமுக எதிர்ப்பு!"
Post a Comment