தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Trending

Breaking News
Loading...

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!


பணிவரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும்
, வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்டக்கூடாது. அனைவருக்கும் ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 
மகப்பேறு விடுமுறை:
 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல் முறையாக 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஆகஸ்ட் 13ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதல் முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்து உரையாற்றினார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மகளிர் அரசு ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் மகப்பேறு கால விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படுவதாகவும் அவர் கூறினார்.
 
 
1980ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தை கடந்த 2011 ஆம் ஆண்டில் 6 மாதங்களாக அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உயர்த்தினார். இதன்பின் 9 மாத காலமாக உயர்த்தப்படும் என்று 2016ஆம் ஆண்டில் அவர் சட்டப்பேரவை விதி 110 கீழ் அறிவித்தார். இதனை தொடர்ந்து இந்த மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கையில் மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது
 
 
இவ்வாறு அளிக்கப்படும் இந்த விடுமுறையை பிரசவத்திற்கு முன்பிருந்து குழந்தை பிறப்புக்கு பின்பு வரை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும் போது எந்த பாகுபாடும் காட்ட கூடாது என அறிவுறுத்தியுள்ளது. “பணி வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறைப்படுத்தப்படாத ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்டக்கூடாது. அனைவருக்கும் ஒரே மாதிரியாக மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

0 Response to "தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel