கொரோனாவிற்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி அவசியமில்லை – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

Trending

Breaking News
Loading...

கொரோனாவிற்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி அவசியமில்லை – உலக சுகாதார நிறுவனம் தகவல்!

கொரோனாவிற்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி அவசியமில்லை – உலக சுகாதார நிறுவனம் தகவல்!




அங்கீகரிக்கப்பட்ட இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி அறிவித்துள்ளார்.
 
பூஸ்டர் தடுப்பூசி:
 
உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கொரோனா தொற்று மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை வரலாறு காணாத அளவிற்கு பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வெற்றிகரமாக தடுப்பூசிகளையும் கண்டுபிடித்தனர். கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி ஒன்று தான் சிறந்த வழி என்பதை மக்கள் அறிந்து கொண்டனர்.
 
 
இதனால் பரவலாக அனைத்து தரப்பு வயதினரும் தற்போது ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளனர். நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 56 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய தொழில் நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே. அரோரா அவர்கள், மக்களுக்கு முழுமையாக இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்துவதற்கு கவனம் செலுத்தப்படுகிறது. கூடுதலாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் போடுவது பற்றி அரசு இன்னும் முடிவு எடுக்க வில்லை என்றும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு பொதுவான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும், உலக உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அவர்களும் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்கு முழுமையான தடுப்பூசி செலுத்துவதற்கு முழு கவனமும் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்பின்னர் தான் மற்ற நாடுகள் பூஸ்டர் டோஸ் போடுவது பற்றி முடிவு செய்யப்படும். மேலும், பூஸ்டர் டோஸ் குடித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போதைக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.

0 Response to "கொரோனாவிற்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசி அவசியமில்லை – உலக சுகாதார நிறுவனம் தகவல்!"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel