தமிழகத்தில் அரசு கல்லூரி முதல்வர்கள், கல்வி இயக்குநர்கள் பணியிட மாற்றம்!

Trending

Breaking News
Loading...

தமிழகத்தில் அரசு கல்லூரி முதல்வர்கள், கல்வி இயக்குநர்கள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் அரசு கல்லூரி முதல்வர்கள், கல்வி இயக்குநர்கள் பணியிட மாற்றம்!


தமிழகத்தில்
4 அரசு கல்லூரி முதல்வர்கள், 3 கல்லூரி கல்வி இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
 
பணியிட மாற்றம் :
 
தமிழகத்தில் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வெளியானதை அடுத்து கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடத்த உயர் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி கடந்த ஜூலை மாதம் 26 ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் திமுக தலைமையிலான அரசு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக உயர்கல்வியில் தரத்தையும் உயர்த்த அரசு திட்டமிட்டு வருகிறது.
 
 
சமீபத்தில் பல்கலைக்கழகங்களிலும் அதன் இணைப்பு கல்லூரிகளிலும் நடைபெறும் பிரச்சனைகள் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. துணை வேந்தர்களும், கல்லூரி முதல்வர்களுக்கு பணி நியமனங்களில், எந்தவித முறைகேட்டிலும் ஈடுபடக்கூடாது என உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். கல்வி தரத்தை உயர்த்த, நடவடிக்கை எடுக்குமாறு, துணை வேந்தர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
 
அதனை தொடர்ந்து தற்போது 4 அரசு கல்லூரி முதல்வர்கள், மற்றும் 3 கல்லூரி கல்வி இயக்குநர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுரண்டை காமராஜர் அரசு கல்லூரி முதல்வர் லதா பூரணம், கடலூர் பெரியார் அரசு கல்லூரி முதல்வராக எழிலன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆத்தூர் அறிஞர் அண்ணா கலைக்கல்லூரி முதல்வராக கலைச்செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

0 Response to "தமிழகத்தில் அரசு கல்லூரி முதல்வர்கள், கல்வி இயக்குநர்கள் பணியிட மாற்றம்! "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel